விடாமுயற்சியுடன் 2-வது முறையாக நீட் தேர்வை எதிர்கொள்ளும் கோவையைச் சேர்ந்த திருநங்கை

3 hours ago 3

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

இந்த தேர்வில் மாணவ-மாணவிகள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மேற்சொன்ன படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதன்படி 2025-26ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு இன்று நடைபெறுகிறது.

இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த திருநங்கை இந்திரஜா இரண்டாவது முறையாக நீட் தேர்வை எழுத உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய நிலையில் மருத்துவ படிப்பு கிடைக்கவில்லை எனவும் விடாமுயற்சியுடன் தற்போது இரண்டாவது முறையாக அதனை எதிர்கொள்வதாக தெரிவித்தார்.

திருநங்கைகளுக்கான இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இதனை எதிர்கொள்வதாகவும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்றும், மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்றும் ஆசைப்படுவதாக தெரிவித்தார். பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தன்னை ஊக்குவித்து வருவதாக தெரிவித்த அவர், அனைத்து துறைகளிலும் திருநங்கைகள் சாதிக்க வேண்டும் என்று கூறினார்.

Read Entire Article