'விடாமுயற்சி' பர்ஸ்ட் சிங்கிள் குறித்து அனிருத் வெளியிட்ட அப்டேட்!

3 weeks ago 3

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாகிறது.இந்நிலையில், நடிகர் அஜித்குமாரின் 'விடாமுயற்சி' படத்தின் டீசர் கடந்த மாதம் 28-ந் தேதி வெளியானது.

 

இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வருகிற 27-ந் தேதி மதியம் 1 மணிக்கு வெளியாகும் என படக்குழு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் .

இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் 'சவதீகா' பாடல் குறித்த அப்டேட் ஒன்றை தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்பாடலை அந்தோணிதாசன் பாடியுள்ள நிலையில் அறிவு இந்த பாடல்வரிகளை எழுதியுள்ளார் எனவும் கூறியுள்ளார். மேலும் பாடலின் சில வரிகளையும் குறிப்பிட்டுள்ளார். இனிவரும் நாட்களில் இந்த லிரிக்ஸ் இணையத்தில் டிரெண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#Sawadeeka sawadeeka.. trip-ah tripping ka.. trip-ah tripping ka.. Sawadeeka sawadeeka.. yakka kapunkaa.. yakka kapunkaa #Vidaamuyarchi single from 1pm tomo AK sir ⚡️⚡️⚡️ #MagizhThirumeni 'Folk Marley' @anthonydaasan@Arivubeing

— Anirudh Ravichander (@anirudhofficial) December 26, 2024

ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article