நாளை வெளியாகும் "டிரெண்டிங்" படத்தின் டிரெய்லர்

4 hours ago 1

சென்னை,

'மெட்ராஸ்' திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரீட்சையமானவர் நடிகர் கலையரசன். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'மெட்ராஸ்காரன்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து தற்போது கலையரசன் கதாநாயகனாக 'டிரெண்டிங்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிவராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் நாயகியாக பிரியாலயா நடித்துள்ளார். இவர்களுடன் பிரேம் குமார் மற்றும் பெசன்ட் ரவி நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கமர்ஷியல் பொழுதுபோக்குடன் உருவாகியுள்ள இப்படம் வருகிற 18-ந் தேதி திரைக்கு வருகிறது. இதற்கிடையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிரெண்டிங் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் ராம் பிலிம் பேக்டரி அறிவித்துள்ளது.

The wait ends TOMORROW! Trailer of #TrendingMovie #Trending drops – get ready to dive deep into the digital chaos!In cinemas from July 18th.@KalaiActor @Priyalaya_ubd @RAMFILMFACTORY #BarefootProduction @5starsenthilk @SamCSmusic @ShivarajNagaraj @srikanth_R @praveenzaiyan pic.twitter.com/rRjZhb06AI

— RAM FILM FACTORY (@RAMFILMFACTORY) July 8, 2025
Read Entire Article