சென்னை,
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் அர்ஜுன், ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இது பிரேக்டவுன் என்கிற ஹாலிவுட் படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்திருக்கிறார். இப்படம் நாளை 1,000-க்கும் அதிகமான திரைகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் விடாமுயற்சி படத்துக்கு போட்டியாக தண்டேல் திரைப்படம் வெளியாக உள்ளது. அதாவது, பிரபல தெலுங்கு இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள தண்டேல் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு பிப்ரவரி 7ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் நாக சைதன்யா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். மீனவர்களை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி உள்ளனர்.
இந்த நிலையில், இந்த இரண்டு படங்களும் அடுத்த நாட்களில் வெளியாக உள்ளன. இதனால் விடாமுயற்சி படத்துக்கும் தண்டேல் படத்தும் போட்டி அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.