மாம்பழம் பறிக்க முயன்றபோது மரத்தில் இருந்து தவறி விழுந்து மாணவன் உயிரிழப்பு

1 hour ago 1

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே முளங்குழி வாறவிளையை சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மனைவி ஜாஸ்மின் ஷைனி. இந்த தம்பதியின் மூத்த மகன் அபிஷேக் (வயது 16). அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 பயின்று வந்தார். அவர் தேர்வு எழுதிய நிலையில் அதன் முடிவுக்காக காத்திருந்தார்.

இந்நிலையில், கோடைவிடுமுறையில் இருந்த அபிஷேக் சூசைபுரம் பகுதியில் உள்ள தன்னுடைய நண்பருடன் விளையாடினார். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு மாமரத்தில் ஏறி மாம்பழம் பறிக்க முயன்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக மா மரத்தின் கிளை திடீரென்று ஒடிந்தது. இதனால் மரத்தில் இருந்து கீழே விழுந்த அபிஷேக் படுகாயம் அடைந்தார். உடனே பிரகாசை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பிரகாசை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மா மரத்தில் ஏறி மாம்பழம் பறித்த போது மரக்கிளை ஒடிந்ததால் தவறி விழுந்து மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Read Entire Article