'விடாமுயற்சி' படத்தின் வசூலை முறியடித்த பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்'!

5 hours ago 3

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி வெளியான படம் 'விடாமுயற்சி'. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் திரிஷா, ஆரவ், அர்ஜுன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். உலகம் முழுவதும் வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. படத்தின் பொருட்செலவை ஒப்பிடும் போது, எதிர்பார்த்த வசூல் செய்யவில்லை. ரூ.150 கோடி வசூல் செய்திருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி 'டிராகன்' திரைப்படம் வெளியானது. இதில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் ரூ.37 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்டது. இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போது கிடைத்துள்ள தகவலின் படி இப்படம் சுமார் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 2025-ம் ஆண்டில் இதுவரை வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் பட வசூலை, வளர்ந்து வரும் நடிகரான பிரதீப் ரங்கநாதனின் படம் முறியடித்துள்ள ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Read Entire Article