தெரு நாய் இல்லாத தமிழகம்

5 hours ago 3

இப்போதெல்லாம் எந்த நோய்க்கு டாக்டரிடம் சென்றாலும், தினமும் தவறாமல் நடைபயிற்சி செல்லுங்கள் என்றே கூறுகிறார்கள். எனவே காலையிலும், மாலையிலும் நடைபயிற்சி செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஆனால் அவர்கள் அச்சமின்றி மன மகிழ்ச்சியோடு செல்கிறார்களா? என்றால் அதுதான் இல்லை. தெரு நாய்கள் கடித்துவிடுமோ என்ற அச்சத்தோடேயே நடையை தொடர்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் வளர்ப்பு நாய்களை கூட்டிக்கொண்டும் பலர் வருகிறார்கள். நாய்களுக்கு பயந்து பலர் கையில் ஒரு கம்பை வைத்துக்கொண்டே வருகிறார்கள். அதோடு நாய்கள் ரோட்டிலேயே அசிங்கம் பண்ணிவிடுவதால், அதில் மிதிக்காமல் செல்லவேண்டும் என்ற அச்சம் தொற்றி கொண்டு விடுகிறது. இதனால் அப்படி ஏதாவது அசிங்கம் இருக்கிறதா? என்று உன்னிப்பாக பார்த்துக்கொண்டு செல்லவேண்டிய நிலையும் இருக்கிறது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து உள்பட பல நாடுகளில் வளர்ப்பு நாய்களை அழைத்துக்கொண்டு பொது இடங்களுக்கு வருபவர்கள் அந்த நாய் அசிங்கப்படுத்தினால், அதை அவர்களே அகற்றி சுத்தப்படுத்தவேண்டும். இதை மீறினால் அபராதம் விதிக்கப்படுகிறது. இதே நடை முறையை இங்கும் கொண்டுவரவேண்டும். வளர்ப்பு நாய் வைத்திருப்பவர்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை அந்த நாய்களுக்கு தடுப்பூசி போட்டுவிட்டால், அவை கடித்தாலும் ஒன்றும் செய்யாது. ஆனால் தடுப்பூசி போடப்படாமல் ரேபிஸ் தொற்று உள்ள தெரு நாய்கள் கடித்தால் மனிதனை மரணத்தின் வாசலுக்கு கொண்டுசென்றுவிடுகிறது. பொதுவாக இதுபோன்ற நாய்கள் கடித்துவிட்டால் அதேநாளிலும், அடுத்து 3, 7, 14 மற்றும் 28-வது நாள் என்று 5 டோஸ் ஊசிகள் கண்டிப்பாக போடவேண்டும். இந்த ஊசி போடாமல் ரேபிஸ் நோய் வந்துவிட்டால், அதை குணப்படுத்த வழியே இல்லை. மரணம் நிச்சயம். பாதிக்கப்பட்டவர்க ளின் உமிழ் நீர் மற்றவர்கள் மேல் பட்டால் அவர்களுக்கும் ரேபிஸ் நோய் பரவிவிடும். இந்த நோய் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதித்துவிடும்.

ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், ரேபிஸ் நோய் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே போகிறது. கடந்த 2024-ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரத்து 483 ஆக உள்ளது. இவர்களில் 43 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்துள்ளனர். அதில், 10 பேர் வளர்ப்பு நாய்கள் கடித்து மரணம் அடைந்திருக் கிறார்கள். இந்த 10 பேரும் அந்த நாய்களை வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்த்தவர்கள். இந்த ஆண்டும் ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 19-ந்தேதி வரையில் 77,540 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் கள். அதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 பேரும், நாமக்கல் மாவட்டத்தில் ஒருவரும் என 3 பேர் இறந்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு அதிகம் நாய்க்கடியால் சிகிச்சை பெற்றவர்கள் வரிசையில் அரியலூர் முதல் இடத்திலும், சென்னை 2-வது இடத்திலும், கடலூர் 3-வது இடத்தி லும் இருக்கிறது. இவ்வளவுக்கும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அரசு ஆஸ்பத்திரிகளி லும் ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி இருக்கிறது. மேலும் உள்ளாட்சி அமைப்புகள் அனைத்திலும் தெரு நாய் களை கட்டுப்படுத்துவதிலும், தொய்வு இருக்கிறது. பல நாடுகளில் தெருநாய்களை எங்கும் பார்க்கமுடியாது. அந்த நிலையை உருவாக்க விலங்கு ஆர்வலர்கள், தன்னார்வ நிறுவனங்கள், அரசு ஆகியோர் இத்தகைய தெரு நாய்களுக்காக தனி புகலிடம் அமைக்கவேண்டும். மொத்தத்தில் தெருநாய் இல்லாத தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கவேண்டும். 

Read Entire Article