'விடாமுயற்சி' படத்தின் ரிலீஸை உறுதி செய்த அஜித்குமார்

3 weeks ago 7

நடிகர் அஜித் நடிப்பதில் மட்டுமல்லாமல் ரேஸிங்கிலும் ஆர்வம் உடையவர். விடாமுயற்சி , குட் பேட் அக்லி ஆகிய படங்களை முடித்துவிட்டு கார் ரேஸிங்கில் பங்கேற்க துபாய் சென்றுள்ளார் அஜித். இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக 'அஜித்குமார் ரேஸிங்' என்ற கார் ரேஸிங் அணியை தொடங்கி கடந்த சில மாதங்களாக அதற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார். அதைத்தொடர்ந்து துபாய் சென்று தனது அணியினருடன் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டார்.

இதற்கிடையில், அடுத்த 9 மாதங்களுக்கு எந்த படத்திலும் நடிக்கப் போவதில்லை எனவும் ரேஸிங்கில் தான் சாதிக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று மாலை துபாயில் நடைபெறும் கார் ரேஸில் நடிகர் அஜித் மற்றும் அவரது குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர்.

இதற்கிடையில், துபாய் ரேஸ் வளாகத்தில் பேட்டி ஒன்றில் 'விடாமுயற்சி' படத்தின் ரிலீஸை உறுதி செய்துள்ளார் அஜித்குமார். அதாவது, "நான் நடித்த இரண்டு படங்கள் ரிலீஸாக உள்ளன. அதில் 'விடாமுயற்சி' படம் ஜனவரி மாதமும், குட் பேட் அக்லி படம் ஏப்ரல் மாதமும் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அங்கு திரண்டு வந்திருந்த ரசிகர்களை பார்த்து, அவர்களை நான் எல்லையின்றி நேசிக்கிறேன் என்று கூறினார். விடாமுயற்சி படம் வருகிற 23-ந் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

"Acting & Racing are both physically & emotionally demanding jobs. I hate Multitasking. So I will focus on one activity at a time. I have 2 releases coming up, #VidaaMuyarchi on Jan & #GoodBadUgly on Summer"- #Ajithkumar pic.twitter.com/5H0ywVJ9Pr

— AmuthaBharathi (@CinemaWithAB) January 11, 2025
Read Entire Article