புனே,
மராட்டியத்தில் ஜி.பி.எஸ். எனப்படும் நரம்பு சார்ந்த நோய் தொற்று பரவி வருகிறது. இந்த தொற்று புனே பகுதியில் அதிகமாக காணப்படுகிறது. இதுவரை 140 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் ஏற்கனவே 3 பேர் உயிரிழந்தனர்.இந்த நிலையில் புனே சிங்காட் சாலை தயாரி பகுதியில் 60 வயது முதியவர் ஒருவர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டார்.
வயிற்று போக்கு மற்றும் பலவீனம் ஏற்பட்டு கடந்த மாதம் 27-ந்தேதி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இதனால் புனே பகுதியில் ஜி.பி.எஸ். நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது