'விடாமுயற்சி' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்பேட்

3 weeks ago 7

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாகிறது.

இந்நிலையில், நடிகர் அஜித்குமாரின் 'விடாமுயற்சி' படத்தின் டீசர் கடந்த மாதம் 28-ந் தேதிவெளியானது. டீசரில் எல்லோரும் எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு.... என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடிகர் அஜித்குமார் டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வெளியாகி ஹிட்டடித்தது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வருகிற 27-ந் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

 

Read Entire Article