'விடாமுயற்சி' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

3 hours ago 1

அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான 'விடாமுயற்சி' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த 6-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

மகிழ் திருமேனி இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகர் அஜித். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் முதல் நாளில் மட்டும் ரூ.34 கோடி வசூல் செய்துள்ளது. விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் உலக அளவில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற மார்ச் மாதம் 3-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

Muyarchi thiruvinai aakum. Vidaamuyarchi ulagai vellum Watch Vidaamuyarchi on Netflix, out 3 March in Tamil, Hindi, Telugu, Kannada & Malayalam!#VidaamuyarchiOnNetflix pic.twitter.com/21OiHpF8AB

— Netflix India South (@Netflix_INSouth) February 24, 2025
Read Entire Article