
சென்னை,
தமிழ் யூடியூபர்களில் அதிகப்படியான ரசிகர்களை கொண்டவர்களில் ஒருவர் வி.ஜே.சித்து. நிகழ்ச்சித் தொகுப்பாளர் , பிராங் ஷோ என கரியரைத் தொடங்கிய விஜே சித்து தற்போது 'சித்து வ்ளாக்ஸ்' என்கிற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான 'டிராகன்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது.
அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வி.ஜே.சித்து இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தினை எழுதி, இயக்கி, ஹீரோவாகவும் நடிக்கவுள்ளார் விஜே சித்து. வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்ப்பில் இப்படத்தை தயாரிப்பாளர் ஐசாரி கணேஷன் தயாரிக்க உள்ளார்.
இதற்கிடையில் நேற்று இப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி வைரலானது. இந்த நிலையில், வி.ஜே.சித்து இயக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்தப்படத்திற்கு 'டயங்கரம்' எனப் பெயரிட்டுள்ளனர். விரைவில் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.