விஜய்யுடன் போட்டி நடனம் - சாய் பல்லவி விருப்பம்

2 hours ago 1

சென்னை,

பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இதில் இவர் நடித்த 'மலர் டீச்சர்' கதாபாத்திரம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. முதல் படத்திலேயே இவருக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. சிவகார்த்திகேயனுடன் 'அமரன்' திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றார்.

தற்போது இவர் நாக சைதன்யாவுடன் 'தண்டேல்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில் முன்னதாக இப்படத்தின் புரமோஷன் பணியின்போது எந்த ஹீரோவுடன் போட்டி நடனம் ஆட விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதிலளித்து கூறுகையில், "யார் ஒருவர் நடனத்தை ரசித்து ஆடுகிறார்களோ அவர்களுடன் ஆடுவதை நான் ரொம்பவே விரும்புவேன். எப்போதும் விஜய்யின் நடனத்தை நான் ரசித்து பார்ப்பேன் ' என்றார்.

Read Entire Article