'விஜய்யுடன் நடிக்கவே முடியாது என்பதை நினைக்கும்போது...' - மமிதா பைஜுவின் பழைய வீடியோ வைரல்

3 months ago 26

சென்னை,

மலையாளத்தில் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் குவித்த 'பிரேமலு' படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொத்தாக அள்ளிய இளம் கதாநாயகி மமிதா பைஜுவுக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன.

தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'ரெபல்' படத்திலும் நடித்தார். சமீபத்தில் விஜய்யின் 'தளபதி 69' படத்தில் இணைந்த மமிதா பைஜு, விஜய்யுடன் நடிக்கவே முடியாது என்று பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்,

'தமிழில் விஜய் சாருடன் நடித்தால் நல்லா இருக்குமே என்று நினைத்திருக்கிறேன். ஆனால், அது இனி நடக்காது என்பதை நினைக்கும்போது வருத்தமாக உள்ளது. நான் விஜய் சாரின் படங்களைப் பார்த்துதான் வளர்ந்தேன். அவர் நடித்த 'கில்லி' படத்துக்கு பிறகு நான் அவரது தீவிர ரசிகையானேன். ரசிகர்கள் விஜய் சாரின் படங்களை கொண்டாடுவார்கள். இனிமேல் அவர் நடிக்கவில்லையெனில் அதையெல்லாம் மிகவும் மிஸ் செய்வேன்' இவ்வாறு பேசியுள்ளார்.

விஜய்யின் கடைசி படமாக 'தளபதி 69' படம் உருவாக உள்ளது. எச்.வினோத் இயக்கும் இப்படத்திl, பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரியாமணி, மமிதா பைஜு, நரேன், பிரகாஷ் ராஜ் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.

Read Entire Article