விஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்: உதயநிதி ஸ்டாலின்

2 months ago 14

சென்னை,

 தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் இன்று நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் குவிந்துள்ளனர். முதல் மாநில மாநாடு நடத்த இருக்கும் விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

எனது முதல் தயாரிப்பு அவருடைய படம் தான்; எந்தக் கட்சியும் வரக்கூடாது என்று சட்டம் இல்லை;யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், அனைவருக்கும் உரிமை உண்டு;இதற்கு முன் பல கட்சிகள் வந்திருக்கிறது, பல கட்சிகள் காணாமல் போயிருக்கிறது;மக்கள் பணி தான் முக்கியம், மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது தான் முக்கியம், கொள்கைகள் முக்கியம்;மக்கள் பணியில் எப்படி ஈடுபடப் போகிறார்கள் என்பதுதான் முக்கியம்" என்றார்.

Read Entire Article