விஜய்யின் "தி கோட்" படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

3 months ago 30

சென்னை,

விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி கடந்த செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் தி கோட். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்தில் விஜய்யுடன் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்தனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய், அப்பா மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் டீஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், திரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'தி கோட்' படம் தற்போது வரை உலகம் முழுவதும் ரூ. 440 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. நீளம் கருதி இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் ஓடிடியில் வெளியாகும் என்று இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் கூறி இருந்தார். சமீபத்தில் வெளியான மட்ட பாடலின் லிரிக் வீடியோ சுமார் 27 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

இந்நிலையில், விஜய்யின் "தி கோட்" திரைப்படம் வரும் அக்டோபர் 3-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் ரிலீஸ் ஆகிறது.

Ever seen a lion become a G.O.A.T?! Thalapathy Vijay's The G.O.A.T- The Greatest Of All Time is coming to Netflix on 3 October in Tamil, Telugu, Malayalam, Kannada & Hindi #TheGOATOnNetflix pic.twitter.com/5mwZ2xdoSo

— Netflix India South (@Netflix_INSouth) October 1, 2024
Read Entire Article