
மதுரை,
சினிமா படப்பிடிப்பில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் நேற்று கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடிக்கு சென்றார். 4 நாட்கள் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்கும் அவர், மே 5ம் தேதி சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார்.
தற்போது விஜய் கொடைக்கானலில் தங்கியுள்ள நிலையில், அங்கு கனமழை பெய்து வருகிறது. கனமழையால் விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், விஜய்யை காண ரசிகர்கள் அங்கு குவிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.