விஜய்க்கு கொள்கை ரீதியான தெளிவு இல்லை - பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா

2 months ago 13

சென்னை,

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தம் கட்சி போட்டியிடும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் இன்று நடைபெற்றது.

இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் உரையாற்றினார். கட்சியின் கொள்கைகளும் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், விஜய்க்கு கொள்கை ரீதியான தெளிவு இல்லை என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எச்.ராஜா கூறுகையில், விஜய்க்கு கொள்கை ரீதியான தெளிவு இல்லை. சித்தாந்த ரீதியில் அவர் குழப்பத்தில் உள்ளார். இவர் தேசியவாதியா? பிரிவினைவாதியா? என தெளிவுப்படுத்த வேண்டும்' என்றார்.  

Read Entire Article