"ஒரு மாதமாக இரவில் தூக்கம் வரவில்லை.. நான் என்ன தவறு செய்தேன்.." - அன்புமணி ராமதாஸ்

4 hours ago 2

தருமபுரி,

தருமபுரியில் நடைபெற்ற பா.ம.க. கட்சியின் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், "பாமக நிறுவனர் ராமதாஸ் ஊர் ஊராக சென்று எல்லோரும் என்னுடன் வாங்க, உங்களுக்கு விடுதலை வாங்கி தருகிறேன். கல்வியும், இட ஒதுக்கீடு வாங்கி தருகிறேன் என்று சொன்னார். இந்த சமூகம் வாழ வேண்டும் என்பதற்காக உருவாக்கினார். யாரும் எம்.எல்.ஏ., எம்.பி. ஆக வேண்டும் என்று நினைக்கவில்லை. வன்னியருக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருந்தால், கட்சி தொடங்க வேண்டிய அவசியமில்லை.

இடஒதுக்கீடு பெறவே தனியாக கட்சி தொடங்கினார். கட்சி தொடங்கியதால் தான், சட்டமன்றத்தில் பேச முடியும். நாம் நடத்திய மாநாட்டை பார்த்து ஆளுங்கட்சி பொறாமைப்படுகிறது. இந்த மாநாட்டிற்கு வந்தவர்கள் தாங்களே பணம் கொடுத்து, வாகனம் வைத்து வந்து சென்றனர். இது நாம் கூட்டிய கூட்டம் அல்ல, கூடிய கூட்டம். நான் பெரியவன், நீ பெரியவன் என்பதில்லை. தட்டிக் கொடுத்து தான் வேலை வாங்கனும். மாநாட்டுக்கு முன்னர் சத்ரியனா இருக்க கூடாது. சாணக்கியனாக இருக்க வேண்டும் என்று சொன்னேன்.

நாம் எப்போது வேகமாக இருக்க வேண்டும் என்பதை நான் சொல்கிறேன்.அவர் வழியில், அவர் இலட்சியங்களை நிறைவேற்றுவோம். அவர் வழியில் தான் பயணிக்கிறோம். அவர் கட்சி தொடங்கிய நோக்கத்தை நிறைவேற்ற போகிறோம்.

கடந்த ஒரு மாதமாக இரவில் தூக்கம் வரவில்லை. என் மனதிற்குள் பல கேள்வி. நான் என்ன தப்பு பண்ணேனு. ஏன் நான் மாற்றப்பட்டேன். என் கனவு, என் இலட்சியம் எல்லாமே, அவர் என் நினைத்தாரோ அதைத்தான் நிறேவேற்றினேன். இனியும் ஒரு மகனாக என்ன நினைக்கிறாரோ அதைத்தான் நிறைவேற்றுவேன். இனிவரும் காலம் நம் காலம். நாம் அனைவரும் ஒற்றுமையாக அணுகுவோம். வெற்றி பெறுவோம். நமது முதல் வெற்றியே வருகிற 2026 தேர்தல் வெற்றியாக இருக்கும்" என்று அவர் கூறினார்.

Read Entire Article