
சென்னை,
தென்னிந்திய சினிமாவில் முண்ணனி நடிகரான ராம் சரண் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் 'கேம் சேஞ்சர்'. இந்த படத்தினை இயக்குனர் ஷங்கர் இயக்கினார். இதில், ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரியான ராம் சரணுக்கும் ஊழல் அரசியல்வாதிகளுக்கும் இடையே நடக்கும் அதிகார பிரச்சினையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவான கேம் சேஞ்சர் படம் எதிர்பார்த்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெற தவறிவிட்டது.
இந்த படத்தின் படத்தொகுப்பை பிரபல மலையாள எடிட்டர் சமீர் முகமத் மேற்கொண்டார். இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய எடிட்டர் சமீர் முகமத் கேம் சேஞ்சர் படத்தில் வேலைப்பார்த்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
அதாவது, "கேம் சேஞ்சர் படம் முதலில் 7.5 மணி நேரமாக எடுக்கப்பட்டிருந்து. அதை என்னிடத்தில் கொடுத்த ஷங்கர் சார் ஒரு படத்திற்கு தேவையான அளவிற்கு கட் செய்து தர சொன்னார். நான் அதை 3 மணி நேரத்திற்கு கட் செய்து எடிட் செய்தேன். ஆனால் என்னால் தொடர்ந்து அந்த படத்தில் வேலை செய்ய முடியவில்ல, அதனால் அப்படத்தில் இருந்து விலகிவிட்டேன். அவருடன் வேலை பார்த்தது எனக்கு மிகவும் மோசமான அனுபவமாக இருந்தது" என கூறியுள்ளார்.