விஜய்க்கு காங்கிரஸ் கேள்வி ஆளுநரிடம் 2 மாதத்தில் சரணடைந்தது ஏன்?

4 months ago 13

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறைத் தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: சினிமாவில் ஒரே பாடலில் கோடீசுவரர் ஆவது போல், இன்றைக்கு ஒரே நாளில் முதல்வர் ஆகிவிடலாம் என்று பலரும் கனவு காண்கிறார்கள். அதுவும் நடிகர் விஜய்யோ முதல்வர் ஆகிவிட்டதாகவே நினைத்து கொண்டிருக்கிறார். திடீரென விழித்து, பெண்களுக்கு தானே பாதுகாப்பு என்பது போல் கைப்பட எழுதி அறிக்கை வெளியிடுகிறார்.

அதை வைத்து கீழ்த்தரமான அரசியலை செய்ய நினைக்கிறார். முதல் மாநாட்டில், ஆளுநர் பதவியே தேவையில்லை என்று கர்ஜித்தவர், இரண்டே மாதத்தில் ஆளுநரிடம் சரணடைந்தது ஏன்?. நலன் விரும்பி என்றால், முதல்வரை தான் சந்தித்து கோரிக்கை வைத்திருக்க வேண்டும். மக்கள் பிரச்னைகளுக்கு இறங்கி வந்து போராட மாட்டீர்கள், மக்களைச் சந்திக்க மாட்டீர்கள் என்றால், யாரை திருப்திப்படுத்த அரசியலுக்கு வந்திருக்கிறீர்கள்? யாருடைய தாளத்துக்கு ஆடுகிறீர்கள்?

இந்தக் கேள்விக்கெல்லாம் நீங்கள் விரைவில் பதில் சொல்லியே ஆக வேண்டும். வீட்டை விட்டு வெளியே வராமல் அரசியல் செய்வதற்கு, இது என்ன ‘ஒர்க் ஃப்ரம் ஹோமா’? இந்தியாவிலேயே, ஏன் உலகிலேயே அரசியலை ‘ஒர்க் ப்ரம் ஹோம்’ ஆக்கிய ஒரே ஆள் விஜய் தான். உங்கள் அரசியல் கபட நாடகத்தை மக்கள் உன்னிப்பாகக் கவனித்து கொண்டிருக்கிறார்கள்.

The post விஜய்க்கு காங்கிரஸ் கேள்வி ஆளுநரிடம் 2 மாதத்தில் சரணடைந்தது ஏன்? appeared first on Dinakaran.

Read Entire Article