விஜய்க்கு அதிமுக பதிலடி

3 days ago 2

சென்னை: தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை அருகே திருவான்மியூரில் தமிழகத்தின் வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பாஜ, திமுகவை, கடுமையாக விமர்சித்தார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரையும், பிரதமர் மோடி பெயரையும் உச்சரித்து பேசினார்.

மேலும், 2026ம் ஆண்டு சட்டப்பேரவைதேர்தலில் த.வெ.க. – தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்கு மட்டும் தான் போட்டி. நம்பிக்கையுடன் இருங்கள் என்று உணர்ச்சி கொப்பளிக்க உரையாற்றினார். விஜயின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்து உள்ளார். அவர் கூறியதாவது: உண்மையான களம் அதிமுக – திமுக இடையேதான். த.வெ.க., தொண்டர்களை ஊக்கப்படுத்த அவர் (விஜய்) அப்படி பேசி உள்ளார். ஆனால், உண்மையான களம் என்பது அதிமுக – திமுகவுக்கு தான். இவ்வாறு அவர் கூறினார்.

The post விஜய்க்கு அதிமுக பதிலடி appeared first on Dinakaran.

Read Entire Article