விஜய் வருகையால் சீமானுக்கு அச்சம்: மாணிக்கம் தாகூர் எம்.பி.

2 months ago 13

சிவகாசி,

சிவகாசியில் மாணிக்கம் தாகூர் எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தெலுங்கு பேசுபவர்கள் பற்றி நடிகை கஸ்தூரி விமர்சித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவரது பேச்சு ஏற்புடையது அல்ல. அனைவரின் மொழியையும் நம்பிக்கையையும் போற்றுகிற மண்ணாக தமிழகம் உள்ளது. அனைத்து தரப்பினர்களையும், எல்லா மொழி பேசக்கூடியவர்களையும் தமிழ்நாடு அரவணைத்து செல்லக்கூடியது.

நடிகர் விஜய் வருகையால் சீமானுக்கு இழப்பு ஏற்படும் என்பது நேரடியாக தெரிந்துவிட்டதால், விஜய் குறித்து சீமான் விமர்சித்து வருகிறார். தனது ஆதரவாளர்கள் தன்னை விட்டு சென்றுவிடுவார்கள் என்ற கவலை சீமானுக்கு வந்துள்ளது. விஜய்யின் வருகை தனது கட்சியின் கூடாரத்தை காலி செய்துவிடுமோ என்ற அச்சம் சீமானுக்கு ஏற்பட்டுள்ளது.

புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்கள் ஆளுகின்ற கட்சியை மட்டுமே விமர்சித்து, எதிர்ப்பு அரசியல் நடத்துவது வழக்கம். அதையே விஜய் கையிலெடுத்துள்ள நிலையில், அதனை ஏற்றுக் கொள்வார்களா? இல்லையா? என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். திமுகவுடன் கலந்து பேசிதான் கூட்டணி அமைப்போம். திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசலுக்கு இடமே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article