விஜய் மேலும் படங்கள் நடிக்க வேண்டும் - நடிகர் சசிகுமார்

13 hours ago 2

சென்னை,

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, அடுத்த ஆண்டு (2026) நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறார். விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்றாகும். 'ஜன நாயகன்' படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக விஜய் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் , விஜய் மேலும் படங்கள் நடிக்க வேண்டும் என நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

"நடிகர் விஜய் மேலும் படங்கள் நடிக்க வேண்டும். அவர் பெரிய எண்டர்டெய்னர்; எனவே அரசியலுக்கு சென்றாலும் அவர் தொடர்ந்து படங்கள் நடிக்க வேண்டும். என தெரிவித்துள்ளார் . 

Read Entire Article