
நீலகிரி,
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது . நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுவதால், அந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனமழை காரணமாக உதகையில் தொட்டபெட்டா, பைன் பாரஸ்ட், அவலாஞ்சி, உதகை படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி சுற்றுலாத் தலங்கள் இன்று தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேறு சுற்றுலாத் தலங்களுக்கு செல்வோர் மாலை 4 மணிக்குள் விடுதிக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.