சென்னை: விசிக முன்னாள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளராக இருந்த நிர்மல் குமார் ஆகியோர் இன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளரா இருந்த நிர்மல் குமார், விசிகவின் முன்னாள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்துக்கு இன்று வந்தனர். அவர்கள் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். தவெகவில் 3 துணை பொதுச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆதவ் அர்ஜுனா பதவி குறித்த அறிவிப்போடு, புது நிர்வாகிகள் நியமனம் பற்றிய அறிவிப்பும் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.