இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி: 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

2 hours ago 3

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்ற தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 356 ரன்களை குவித்தது.

அதிகபட்சமாக சுப்மன் கில் 112 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 78 ரன்களும், மீண்டும் ஃபார்முக்கு வந்த விராட் கோலி 52 ரன்களும், கே.எல். ராகுல் 10 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ரஷீத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

357 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 34.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 214 ரன்கள் மட்டுமே எடுத்து 142 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக டாம் பென்டன், கஸ் அட்கின்சன் தலா 38 ரன்கள எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா, அக்ஷர் படேல், ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்த அபார வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது.

The post இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி: 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி appeared first on Dinakaran.

Read Entire Article