விஜய் தேவரகொண்டாவுடன் நடித்தபோது அசவுகரியமாக உணர்ந்த அனன்யா பாண்டே

2 hours ago 1

சென்னை,

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனன்யா பாண்டே. இவர் கடந்த 2022-ம் ஆண்டு நடித்திருந்த படம் லிகர். விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தை பூரி ஜெகனாத் இயக்கி இருந்தார். இருந்தபோதிலும் இப்படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது.

இந்நிலையில், இப்படத்தில் நடித்தபோது அனன்யா பாண்டே அசவுகரியமாக உணர்ந்ததாக அவரது அப்பா சங்கி பாண்டே தெரிவித்திருக்கிறார்.

மேலும், இப்படத்தில் நடிக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் அனன்யா இருந்ததாகவும் , தான்தான் அவரை ஒப்புக்கொள்ள வைத்ததாகவும் கூறினார். லிகரின் தோல்விக்கு பிறகு சினிமாத்துறை சம்பந்தமாக அனன்யாவுக்கு ஆலோசனைகள் வழங்குவதை நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்தார்


Read Entire Article