தேனி பஸ் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு... 6 கடைகளுக்கு ரூ. 18 ஆயிரம் அபராதம்

3 hours ago 1

தேனி,

தேனி பஸ் நிலையத்தில் தொடர்ந்து உணவுப்பொருட்கள் காலாவதியானதை விற்பனை செய்வதாக மாவட்ட ஆட்சியர்க்கு பல முறை தகவல்கள் வந்தது. இதன் அடிப்படையில் இன்று மாவட்ட கலெக்டர் திடீரென தேனி பஸ் நிலையத்தில் இருந்த கடைகளில் சோதனை நடத்தினார். அப்போது அங்குள்ள பேக்கரி கடை, டீ கடை, இறைச்சி கடை மற்றும் உணவு கடை ஆகிய இடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கெட்டுப்போன பல பொருட்களை பறிமுதல் செய்து அதற்கு அபராதம் விதித்தனர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் கண்டுபிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் மொத்தம் 200 கிலோவுக்கும் மேலான காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 2.5 கிலோ கெட்டுப்போன இறைச்சியும் கண்டுபிடிக்கப்பட்டு மொத்தம் 6 கடைகளுக்கு ரூ. 18 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Read Entire Article