விஜய் சேதுபதியின் புதிய படம்.. டைட்டில் டீசர் வெளியீடு

13 hours ago 3

சென்னை,

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது. இது விஜய் சேதுபதியின் 52-வது படமாகும். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நித்யா மேனன், யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே 19(1)(ஏ) என்ற மலையாள படத்தில் விஜய் சேதுபதியும், நித்யா மேனனும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பப் பின்னணியைக் கதையாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. விஜய் சேதுபதி - பாண்டிராஜ் இருவரும் முதல் முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி புரோட்டா மாஸ்டராக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது. அதில் இப்படத்திற்கு 'தலைவன் தலைவி' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

Presenting you #VJS52 - Thalaivan Thalaivii | தலைவன் தலைவி ! A rugged love story! https://t.co/8ypkJVZPtx@VijaySethuOffl @MenenNithya @pandiraj_dir @iYogiBabu @Music_Santhosh @thinkmusicindia @mynnasukumar @PradeepERagav @Veerasamar #ThalaivanThalaivii #தலைவன்தலைவி pic.twitter.com/fXrLOyYsYB

— Sathya Jyothi Films (@SathyaJyothi) May 3, 2025
Read Entire Article