'விஜய் கேட்ட கேள்வி சரியானதுதான்' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

2 months ago 14

சென்னை,

த.வெ.க. மாநாட்டில் மாநில அரசு குறித்து விஜய் கேட்ட கேள்வி சரியானதுதான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது ஜெயக்குமார் கூறியதாவது;-

"மத்திய அரசு பாசிசத்தை நோக்கி செல்கிறது. அப்படியென்றால் மாநில அரசு எதை நோக்கி செல்கிறது? அது பாசிசம் என்றால் இது பாயாசமா? என்று விஜய் கேட்ட கேள்வி சரியானதுதான். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது பாசிசம் இல்லையா? எதிர்க்கட்சிகள் ஒடுக்கப்படுவது பாசிசம் இல்லையா?

அரசை எதிர்த்து கேள்வி கேட்டால் சிறைவாசம் என்ற வகையில், தமிழகத்தை ஆளும் திராவிட மாடல் அரசு பாசிசத்தை கையில் எடுக்கிறதா? என்பதைத்தான் விஜய் கேட்டிருக்கிறார். அவர் கேட்ட கேள்வியில் எந்த தவறும் இல்லை."

இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.

Read Entire Article