'விஜய் என்னை எதிர்த்து வேலை செய்தாலும் அவரை நான் ஆதரிப்பேன்' - சீமான்

3 months ago 20

சென்னை,

நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்த அவர், தற்போது கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், விஜய்க்கு தனது ஆதரவு எப்போதும் இருக்கும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"யானை என்பது ஒரு கட்சிக்கு மட்டுமே சொந்தமானதா? தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே விஜய்யை பற்றி பேசுகின்றனர். அவர் ஒரு புகழ்பெற்ற திரைக்கலைஞர் என்பதால் அவர் ஒரு கட்சி ஆரம்பிக்கும்போது என்னைப் போன்றவர்களிடம் கேள்வி கேட்கிறார்கள். நாங்கள் பதில் சொல்கிறோம்.

அவரது கொள்கைகள் என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆயிரம்தான் இருந்தாலும் விஜய் என் தம்பி. அவரை நான் எப்போதும் ஆதரிப்பேன். விஜய் என்னை எதிர்த்து வேலை செய்தாலும் அவரை நான் ஆதரிப்பேன். அதில் எந்த பிரச்சினையும் கிடையாது."

இவ்வாறு சீமான் தெரிவித்தார். 


Read Entire Article