
சென்னை
சென்னை தரமணியில் இருந்து திருவான்மியூர் செல்லும் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதில், கார் ஒன்று கவிழ்ந்தது. மெட்ரோ ரெயில் பணியால் இந்த விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என கூறப்பட்டது. ஆனால், விபத்து நடந்த இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில்தான் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகின்றன.
அதனால், இந்த விபத்திற்கும், மெட்ரோ ரெயில் பணிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இந்த பள்ளம் ஏற்பட்ட இடத்திற்கு அருகே கழிவுநீர் கால்வாய் அமைப்புதான் உள்ளது. ரெயில் சுரங்க பணிகளுக்கும் இந்த விபத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.