
சென்னை,
2011 ஆம் ஆண்டு 'லத்திகா' என்ற படத்தை இயக்கி நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன். கதாநாயகனாக திரையில் தோன்றினாலும் அவரை காமெடியனாகவே மக்கள் ஏற்றனர். அதனை தொடர்ந்து 'கண்ணா லட்டு தின்ன ஆசையா, ஐ, ஒன்பதுல குரு' உள்ளிட்ட பல்வேறு படங்களில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
இந்த நிலையில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், சென்னை வடபழனியில் திரைப்பட பூஜை ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது "தவெக தலைவர் விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன்" என பேட்டி அளித்துள்ளார்.
அதாவது, "எனக்கும் ரசிகர்கள் உள்ளனர், விஜய்யை போல் எனக்கும் கூட்டம் கூடும். முதலில் விஜய்யை களத்திற்கு வர சொல்லுங்கள், மேடையில் பேசுவது எல்லாம் பஞ்ச் டயலாக் வசனங்கள். சட்டமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் விஜய் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன். எந்த கட்சி அழைத்தாலும் விஜய்யை எதிர்த்து போட்டியிட நான் தயார்" என்று கூறியுள்ளார்.
மேலும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை சொல்ல வேண்டுமே தவிர, கூட்டம் இருக்கிறது என்பதற்காக எடுத்தோம் கவிழ்த்தோம் என மேடைகளில் பேசக்கூடாது என்று நடிகர் பவர்ஸ்டார் அறிவுரை கூறியுள்ளார்.