
காரைக்கால்,
காரைக்கால் மாவட்ட கலெக்டர் அப்பாராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால் துறைமுகம்,ஓ.என்.ஜி.சி,புதுச்சேரி மின்திறல் குழுமம், உள்ளிட்ட பெரிய தொழிற்சாலைகள்,அரசு அலுவலகங்க கட்டிடங்கள், அரசு மருத்துவ கட்டிடங்கள் உள்ளிட்ட பகுதிகளின் மேலே மறு உத்தரவு வரும் வரை டிரோன்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது .