
சென்னை,
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று செயற்குழு கூட்டத்தில் பேசுகையில், "தி.மு.க.வு டனும், பாரதீய ஜனதா கட்சியுடனும் ஒருபோதும் கூட்டணி கிடையாது" என்று கூறினார். அவரது இந்த பேச்சுக்கு தி.மு.க. தலைவர்கள் வர வேற்பு தெரிவித்துள்ளனர். பாரதீய ஜனதா கட்சி இருக்கும் கூட்டணியில் விஜய் சேர மாட்டார் எd; gது உறுதியாகி இருப்பதால் தமிழகத்தில் 3 அல்லது 4 முனை போட்டி உருவாகும். அது தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று தி.மு.க. தலைவர்கள் மகிழ்ச்சியுடன் கூறி வருகிறார்கள்.
இது தொடர்பாக கனி மொழி எம்.பி. கூறியதா வது:-
தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று விஜய் அறிவித்து இருப்பதை வரவேற்கிறேன். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.2026-ம் ஆண்டு சட்ட சபை தேர்தலில் விஜய் எடுத்துள்ள முடிவு நிச்சய மாக தி.மு.க.வை ஒருபோதும் பாதிக்காது. விஜய் தெரி வித்த கருத்துக்கள் நிறைய பேருக்கு அதிர்ச்சியை கொ டுத்து இருக்கும். ஏனெனில் விஜய் முடிவு அவர்களை பாதிக்கப் போவது உறுதி.
ஆனால் தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். தங்களுக்கு எதிரி யார் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். ஆகை யால் விஜய் அறிவித்துள்ள முடிவு அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை கடுமையாக பாதிக்கும்.ஒவ்வொரு கட்சியும் முடிவு எடுப்பதற்கு முழுமை யான உரிமை இருக்கிறது. கூட்டணி தொடர்பாக எந்த கட்சியும் எந்த முடிவும் எடுக்கலாம். அது அவர்க ளுடைய விருப்பம். அந்த வகையில் விஜய் எடுத்த முடிவு தி.மு.க.வுக்கு சாதக மாக இருக்கும்.இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.