சென்னை,
ரோமியோ, மழை பிடிக்காத மனிதன் போன்ற படங்கள் வெளியான நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹிட்லர் எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது.
விஜய் ஆண்டனி புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படத்தை அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மாயவன் உள்ளிட்ட படங்களில் எடிட்டராக பணிபுரிந்த லியோ ஜான் பால் இயக்குகிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற அக்டோபர் 16ம் தேதி காலை 11 மணியளவில் வெளியாகும் என பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தினை விஜய் ஆண்டனி தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.