
கோவை,
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்கினார். மேட்டுப்பாளையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்கினார். வனபத்திரகாளி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சுற்றுப்பயணத்தை தொடங்கினார். மேட்டுப்பாளையத்தில் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி பரப்புரை ஜூலை 23ல் பட்டுக்கோட்டையில் நிறைவுபெறும். எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி 33 சட்டமன்றத் தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.
தொடர்ந்து, 10.30 மணியளவில் விவசாயிகளைச் சந்தித்து அவர் பேசவுள்ளார். அடுத்ததாக, பிளாக் தண்டர் செல்லும் எடப்பாடி பழனிசாமி, மாலை 4.35 மணியளவில் பிளாக் தண்டர் முதல் ஊட்டி சாலை காந்தி சிலை வரையில் ரோடு ஷோவும் செல்கிறார். இறுதியாக, மேட்டுப்பாளையம் பேருந்து நிலைய சந்திப்புக்கு அவர் செல்கிறார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தற்போது கோவையில் விவசாயிகளைச் சந்தித்து பேசி வருகிறார்.
கோவை மாவட்ட சுற்றுப் பயண விவரம்:-
07-07-2025 காலை 9.00 மணிக்கு மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி, தேக்கம்பட்டி பகுதியில் உள்ள புகழ்பெற்ற வனபத்திரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
அதை தொடர்ந்து தேக்கம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, விவசாயிகளுடன் கலந்துறையாடுகிறார்.
மாலை 4.35 மணிக்கு, மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலை, காந்திசிலை அருகே ரோடுஷோவில் கலந்து கொண்டு பொது மக்களை சந்திக்கிறார்.
மாலை 5 மணிக்கு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் பிரச்சார வாகனத்தில் நின்றவாறு பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்.
மாலை 5.40 மணிக்கு காரமடை பேருந்து நிறுத்தம் அருகில் பிரச்சார வாகனத்தில் நின்றவாறு பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்.
மாலை 6.40 மணிக்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்.
மாலை 7.40 மணிக்கு துடியலூர் ரவுண்டானா அருகில் பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்.
இரவு 9 மணிக்கு சரவணம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்.
கோவை மாநகர மாவட்டம், 08-07-2025:-
மாலை 4 மணிக்கு கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடவள்ளி பேருந்து நிலையத்தில் மக்களிடையே உரையாற்றுகிறார்.
மாலை 5.30 மணிக்கு சாய்பாபா காலணி பகுதியில் ரோட்ஷோவில் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
மாலை 6. மணிக்கு வடகோவை சிந்தாமணி அருகில் பொதுமக்களின் வரவேற்ப்பை ஏற்றுகொள்கிறார்.
மாலை 6.30 மணிக்கு கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவை டவுண்ஹால் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கோணியம்மன் கோவில் முன்பாக பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொள்கிறார்.
மாலை 7 மணிக்கு சுங்கம் ரவுண்டானாவில் பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுகொள்கிறார்.
மாலை 9 மணிக்கு புலியகுளம் பகுதியில் பொதுமக்களிடையே வாகனத்தில் நின்றபடி உரையாற்றுகிறார்.