விஜய், அஜித் போன்றவர்களுக்கு வில்லனாக நடிக்க ஆசை - நடிகர் ஆதி

3 hours ago 2

சென்னை,

சாமி டைரக்டு செய்த 'மிருகம்' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகனாக அறிமுகமானவர், ஆதி. இவர். பிரபல தெலுங்கு டைரக்டர் ரவிராஜாபினி செட்டியின் மகன். 'ஈரம், அரவான், மரகத நாணயம், கிளாப்' ஆகிய படங்களில் ஆதி நடித்து பிரபலமானவர்.

இவர் தற்போது அறிவழகன் இயக்கத்தில் 'சப்தம்' படத்தில் நடித்துள்ளார். இன்று திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் அடுத்ததாக, நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து மரகதநாணயம் 2 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்சியில் பேசிய ஆதி, ஹீரோவை விட வில்லனாக நடிப்பதற்குதான் விருப்பம் என்று தெரிவித்துள்ளார். அதாவது, வில்லன் கதாபாத்திரத்துக்கு என பெரிதாக எல்லைகள் எதுவும் இருக்காது என்பதால் வில்லனாக நடிப்பது ஒரு சுவாரஸ்யம்தான். விஜய் மற்றும் அஜித் போன்றவர்களுக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. இருந்தாலும் கதை தானே அதை தீர்மானிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

Read Entire Article