
சென்னை,
ஹேமந்த் நாராயணன் 'மர்மர்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படமே தமிழில் உருவாகியுள்ள முதல் பவுண்ட் புட்டேஜ் ஹாரர் திரைப்படமாகும். பவுண்ட் புட்டேஜ் ஹாரர் திரைப்படங்கள் என்றால் திரைப்படத்தின் காட்சிகள் பெரும்பாலானவை டேப் ரெகார்டர், சிசிடிவி கேமரா பூட்டஜ் போலயே காட்சி படுத்திருப்பர். இதன் மூலம் உண்மையாகவவே அந்த அமானுஷ்ய சம்பவ உணர்வை அது பார்வையாளர்களுக்கு கடத்தும்.

இப்படத்தை ஸ்டான் அலோன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் `கபா கபா கபிஸ்து' என்ற வார்த்தை இடம்பெற்றது. படத்தின் ஒளிப்பதிவை ஜேசன் வில்லியம் மேற்கொள்கிறார்.ரோகித் படத்தொகுப்பை செய்கிறார். திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்களின் விவரத்தை விரைவில் வெளியிடுவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 'மர்மர்' செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. 'மர்மர்' திரைப்படம் வரும் மார்ச் மாதம் 7ம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. 'மர்மர்' படத்தின் புதிய டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குநர் ஹேம்நாத் நாராயணன் பேசும்போது, "மர்மர் தமிழ் திரையுலகின் முதல் பவுண்ட் பூட்டேஜ் ஹாரர் திரைப்படம். அமானுஷ்ய விஷயங்கள் சார்ந்த தகவல்களை பதிவிடும் ஏழு யூடியூபர்கள் ஜவ்வாது மலையில் இருக்கும் ஏழு கன்னிசாமிகள் மற்றும் மங்கை எனும் சூனியக்கார ஆவி சுற்றித் திரிவதை நேரடியாக பதிவு செய்ய செல்கிறார்கள்.செல்லும் வழியில் அவர்கள் காணால் போகின்றனர். அவர்களை கண்டுபிடிக்க செல்லும் காவல் துறையினர் உடைந்து கிடக்கும் கேமராக்களை பறிமுதல் செய்கின்றனர். அவ்வாறு கேமராக்களில் உள்ள காட்சிகளை ஆவணப் படமாக வெளியிடுகிறார்கள். அதைத்தான் இந்தப் படத்தின் கதையாக வைத்திருக்கிறோம்.
எனக்கு தனிப்பட்ட முறையில் பேய் நம்பிக்கை இல்லை. நான் நம்பாத ஒரு விஷயத்தை அனைவரும் கண்டு அஞ்சும் அளவுக்கு இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். எனக்கு பேய் மீது நம்பிக்கையில்லை. இந்தப் படத்தின் மீது நம்பிக்கை உள்ளது. என் மீது நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையில்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன்.." என்று கூறினார்.