சென்னை: “விசைத்தறி உரிமையாளர்கள் பிரச்சினையைத் தீர்க்க எல்லா நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது” என்று சட்டப்பேரவையில் அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீமானத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.17) நேரமில்லா நேரத்தின்போது, கோவை, திருப்பூரில் நடைப்பெற்று வரும் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசும்போது, “கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 1.5 லட்சம் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவர்கள் 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் கூலி உயர்வு கேட்டு போராடி வருகின்றனர். இவர்களுக்கு 2022-ம் ஆண்டு முதல், நெசவு கூலி உயர்வு ஒப்பந்தத்திலிருந்து கூலி குறைத்து வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.