சென்னை: விசிக மறுசீரமைப்பு பணிகள் ஒருவாரத்தில் தீவிரப்படுத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறி்த்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஓரிருவர் மட்டுமே வணிகத்தில் ஆதிக்கம் செலுத்துவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பது முற்றிலும் உண்மை. பொருளாதாரத்தை மட்டுமல்ல இந்தியாவின் அரசியலையே அவர்கள் தீர்மானிக் கின்றனர். இது அனைவரும் அறிந்ததே. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக மாவட்டச் செயலாளர்களை நியமிப்பது என கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்தோம்.