விசாரணையின் போது அதிகாலை 3 மணிக்கு திடீர் வலிப்பு; ‘பாலியல் சைக்கோ’ ஞானசேகரன் அரசு மருத்துவமனையில் அனுமதி

2 hours ago 1

சென்னை: அண்ணா பல்லைக்கழக மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் 7 நாள் காவலில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணிக்கு திடீரென பாலியல் சைக்கோ ஞானசேகரனுக்கு வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவனை போலீசார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 24ம் தேதி இரவு கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கடந்த 25ம் தேதி கோட்டூர்புரத்தை சேர்ந்த பிரியாணிக்கடைக்காரரான ஞானசேகரன் என்பவனை கோட்டூர்புரம் உதவி கமிஷனர் பாரதிராஜா தலைமையில் தனிப்படையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. மேலும், இந்த விழக்கை விசாரிக்க 3 பெண்கள் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்டு சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சிறப்பு புலனாய்வு குழுவினர் ‘பாலியல் சைக்கோ’ ஞானசேகரனை சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று முன்தினம் முதல் 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் இன்று அதிகாலை சிறப்பு புலனாய்வு குழு கைப்பற்றப்பட்ட ஆபாச வீடியோக்களை காட்டி அதில் உள்ள பெண்கள் யார் யார் என்பது குறித்து கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தி வந்த நிலையில், திடீரென அதிகாலை 3 மணிக்கு ஞானசேகரனுக்கு வலிப்பு ஏற்பட்டது.

உடனே சிறப்பு புலனாய்வு குழுவினர் ஞானசேகரனை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் கைதிகளுக்கான சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஞானசேகரனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் நேரடி கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் ஞானசேகரனுக்கு தலையில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

The post விசாரணையின் போது அதிகாலை 3 மணிக்கு திடீர் வலிப்பு; ‘பாலியல் சைக்கோ’ ஞானசேகரன் அரசு மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article