மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்றத்துடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் உயர்ந்து முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 567 புள்ளிகள் சரிந்து 76,405 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 21 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 131 புள்ளிகள் அதிகரித்து 23,155 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 26 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து விற்பனையாயின.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஜன.20) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 398.21 புள்ளிகள் உயர்ந்து 77,017.54 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 105.15 புள்ளிகள் உயர்ந்து 23,308.35 ஆக இருந்தது. இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 272.22 புள்ளிகள் (0.36%) உயர்ந்து 76,891.55 ஆகவும், நிஃப்டி 64.25 புள்ளிகள் (0.28%) உயர்ந்து 23,267.45 ஆகவும் இருந்தது. இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 14 பைசா குறைந்து ரூ.86.47 ஆக இருந்தது.
பங்குச்சந்தை உயர்வினால் இன்போசிஸ் பங்கு 3%, டிசிஎஸ் பங்கு 2.9%, டெக் மகிந்திரா பங்கு 2%, பஜாஜ் ஃபின்செர்வ் பங்கு 1.6% விலை உயர்ந்தன. சன் பார்மா பங்கு 1.7%, ஹெச்.சி.எல். டெக், பஜாஜ் பைனான்ஸ், எச்.டி.எப்.சி. வங்கு பங்குகள் தலா 1.4% விலை உயர்ந்தன. இண்டஸ்இண்ட் வங்கி, கோட்டக் வங்கி, மாருதி சுசூகி, ஜொமாட்டோ, நெஸ்லே உள்ளிட்ட பங்குகளும் விலை உயர்ந்தன. டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட், ஆக்சிஸ் வங்கி, எஸ்.பி.ஐ., எல்&டி, என்.டி.பி.சி. உள்ளிட்ட பங்குகள் விலை குறைந்தன.
The post வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்றத்துடன் காணப்பட்ட பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிந்தது appeared first on Dinakaran.