'விக்ரம்' படத்தின் சாதனையை முறியடித்த 'தக் லைப்'

3 hours ago 4

சென்னை,

36 வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும்அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கிடையில் நேற்று மாலை இப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

இந்த நிலையில், தக் லைப் படத்தின் டிரெய்லர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான 'விக்ரம்' படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. அதாவது, விக்ரம் படத்தின் டிரெய்லர் 24 மணி நேரத்தில் 12 மில்லியன் பார்வைகளை பெற்றிருந்தது. இதை விட தக் லைப் டிரெய்லர் அதிக பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. அதாவது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியான 'தக் லைப்' படத்தின் டிரெய்லர் இதுவரை 23 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article