
சென்னை,
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தனது 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
தலித் மக்கள் மீதான தொடர் தாக்குதல்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் பதில் என்ன? சிவகங்கையில் 'நீயெல்லாம் புல்லட் ஓட்டலாமா?' என சாதி வெறியர்களால் அய்யாச்சாமி என்ற வாலிபரின் கைகள் வெட்டப்பட்ட கடுந்துயரத்தை கடந்து சென்றுள்ளார் சங்பரிவார் மு.க.ஸ்டாலின்!
திரைத்துறையில் இருந்தாலும் சமூக செயற்பாட்டாளராய் டைரக்டர் பா.ரஞ்சித் குரல் கொடுத்துள்ளார். ஆனால் தி.மு.க.வின் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட இயக்கங்கள் அமைதி காப்பது ஜனநாயகத்திற்கான பேராபத்து. தலித்களின் வாக்குகளை அறுவடை செய்து ஆட்சியில் அமர்ந்து விட்டு அவர்களுக்கு எதிராகவே காவல்துறையை வைத்து பொய் முடிச்சுகளை போடும் இந்த அவல ஆட்சி நிச்சயம் அகற்றப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.