
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்களுக்கு உயர்கல்வி படிப்பிற்கு கல்லூரிகளில் சேர்க்கைக்காக விண்ணப்பித்து பயன்பெற சார்ந்தோர் சான்று முன்னாள் படைவீரர் அலுவலகத்தை நேரில் அணுகி பெறலாம். மேலும் இச்சான்று பெறுவதற்கு முன்னாள் படைவீரர் நலத்துறை இணையதள முகவரியில் (exwel.tn.gov.in) விண்ணப்பித்து சான்று பெற்றிடலாம். நடப்பு கல்வி ஆண்டிற்கு, இதற்கு முந்தைய கல்வி ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட சார்ந்தோர் சான்றிதழினை (Dependent Cerificate) பயன்படுத்தக் கூடாது. சார்ந்தோர் சான்று பெறுவதற்கு விண்ணப்பிக்கும் முன்னாள் படைவீரரின் படைவிலகல் சான்றில் குழந்தையின் பெயர் பதிவுகள் இருத்தல் வேண்டும். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் உதவி இயக்குநரை நேரில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.