
ஜெய்ப்பூர்,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்தது. அதிகபட்சமானா நேஹல் வதேரா 70 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 220 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் - வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர். இதில் அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரை அதிரடியாக எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் 4 பவுண்டரி ஒரு சிக்சர் என 22 ரன்கள் அடித்து அசத்தினார்.
இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு இன்னிங்சின் முதல் ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பஞ்சாப் பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார். இதற்கு முன்னர் மேக்ஸ்வெல் பெங்களூருவுக்கு எதிராக 20 ரன்கள் கொடுத்திருந்ததே மோசமான சாதனையாக இருந்தது. தற்போது அவரை முந்தி அர்ஷ்தீப் சிங் இந்த மோசமான சாதனையை படைத்துள்ளார்.
தற்போது வரை ராஜஸ்தான் 8 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 105 ரன்கள் அடித்துள்ளது. ஜெய்ஸ்வால் 49 ரன்களுடனும், சாம்சன் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். சூர்யவன்ஷி 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.