வாழ்நாள் சாதனையாளர் விருது - இங்கிலாந்து சென்ற சிரஞ்சீவிக்கு உற்சாக வரவேற்பு

5 hours ago 3

லண்டன் ,

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. இவர் இதுவரை 150 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இதற்கிடையில், சமுதாயத்திற்கு சிறப்பாக பங்காற்றியதற்காக, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சிரஞ்சீவிக்கு நாளை பாராட்டு விழா நடைபெற உள்ளது. அவருக்கு 'பிரிட்ஜ் இந்தியா' அமைப்பும் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவிக்க உள்ளது.

இது சினிமா மட்டுமல்லாமல், பொது சேவை, கலாசார தலைமைத்துவம் ஆகியவற்றுக்காகவும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், இதில் கலந்துகொள்வதற்காக சிரஞ்சீவி இன்று காலை இங்கிலாந்து சென்றார். அப்போது லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு சிரஞ்சீவிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், இந்திய நடிகர் ஒருவருக்கு கிடைக்கப்போகும் கவுரவத்தால், சினிமா ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Read Entire Article