'வாழ்க்கையில் தன்னுடன் உள்ளவர்களையும் வெற்றி பெற வைக்க வேண்டும் " - சிவகார்த்திகேயன்

1 week ago 2

திருச்சி,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது 'சூரரைப் போற்று' படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று திருச்சியில் தான் படித்த பள்ளி நிகழ்ச்சி விழாவில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,

'இந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை நான் பயின்றேன். இன்று நான் நடிகர், சிறப்பு விருந்தினர் என இருக்கலாம். அதையெல்லாம் தாண்டி நான் இந்த பள்ளியில் படித்து வளர்ந்துள்ளேன் என்பது பெருமையாக உள்ளது.

இந்தப் பள்ளியை என்றும் மறக்க மாட்டேன். இப்பொழுது மாணவர்களுக்கு பெற்றோர், சோசியல் மீடியா என்ற பிரஷர் இருக்கும். பள்ளி வாழ்க்கையை மிஸ் பண்ணாதீங்க. நல்லா படிங்க.

எனக்கு ஒரு படம் ஹிட்டாகிற சந்தோஷத்தை விட ஒரு சதவீத அதிக சந்தோஷம், இந்த பள்ளிக்கு வந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது. வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும், உடன் உள்ளவர்களையும் வெற்றி பெற வைக்க வேண்டும்" என்றார்.

Read Entire Article